சென்னை: “எனது படத்தின் போஸ்டரை பகிர்ந்து உலகம் முழுவதும் கொண்டு சென்ற எலான் மஸ்குக்கு நன்றி” என ‘தப்பாட்டம்’ படத்தின் நடிகர் துரை சுதாகர் தெரிவித்துள்ளார்.
ஓபன் ஏஐ’ நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் இணைவதாக அறிவித்தது. இதற்கு எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆப்பிள் சாதன பயனர்களின் தரவு சார்ந்த விவரங்களை இதன் மூலம் ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்கிறது என்றும் விமர்சித்திருந்தார். இதனைக் கிண்டலாக விமர்சிக்கும் வகையில் மீம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். 2017-ல் வெளியான ‘தப்பாட்டம்’ தமிழ்ப் படத்தின் காட்சியை எலான் மஸ்க் மீம் ஆக பகிர்ந்தது உலக அளவில் கவனம் பெற்றது. தமிழ் படம் ஒன்றின் மீம் உலக அளவில் பரவியது குறித்து அப்படத்தின் நடிகர் துரை சுதாகர் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தஞ்சையில் நிகழ்வு ஒன்றில் பேசியுள்ள அவர், “நான் ‘களவாணி 2’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இன்று எலன் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில் நான் நடித்த ‘தப்பாட்டம்’ திரைப்படத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது உலக நாடுகள் முழுவதும் பரவி, அங்கிருக்கும் தமிழ் மக்கள் இந்த மகிழ்ச்சியை நம்முடன் பகிர்ந்துள்ளார்கள்.
தமிழ் திரைப்படத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக நான் நினைக்கிறேன். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான் ‘தப்பாட்டம்’. அதன் புகைப்படம் உலக அளவில் பரவியிருக்கிறது. அதற்காக எலன் மஸ்க்குக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்தை அவர் கவனத்து கொண்டு செல்ல உதவியாக இருந்த சமூக வலைதளங்கள், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நன்றி.
» மீண்டும் ரவி தேஜாவுடன் இணையும் ஸ்ரீலீலா - பூஜையுடன் படப்பணிகள் தொடக்கம்
» கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது - காவல்துறை விசாரணை
இந்தப் படம் பறையிசை பற்றியும், கணவன், மனைவியிடத்தில் சந்தேகம் வந்தால் வாழ்க்கை எப்படி சீரழியும் என்பதை இப்படம் பேசுகிறது. இந்தப் படத்தில் நடித்த பிறகு எனக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. இளநீரின் அம்பாசிட்டராக ஆக போகிறீர்களா? என பலரும் கேட்டார்கள். இதை ஆபாசமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. இது கணவன், மனவையிடம் இருக்கும் நெருக்கத்தை விளக்கும் புகைப்படம்தான் இது” என்று அந்தப் போஸ்டரின் குறியீடுக்கும் விளக்கம் அளித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
40 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago