“இந்த பூமிக்கு எல்லாரும் பொழைக்க வந்தவங்க தான்” - ‘ரயில்’ ட்ரெய்லர் எப்படி? 

By செய்திப்பிரிவு

சென்னை: பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள ‘ரயில்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இதில் இடம்பெற்றுள்ள வசனம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ட்ரெய்லர் எப்படி? - “பொழைக்க வந்தவன், பொழைக்க வந்தவன்னு இளக்காரமா பேசிட்டு திரியாதீங்க. இந்த பூமிக்கு நம்ம எல்லா பயலுகளும் பொழைக்க வந்தவங்க தான்” என ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனம் உண்மையில் படத்துக்கான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழர் ஒருவரின் வீட்டில் குடியிருக்கிறார். அவருக்கு உதவியாகவும் இருக்கிறார். அவரை தவறாக புரிந்துகொண்டு, வன்மம் காரணமாக அவர் மீது நடக்கும் தாக்குதலாக படம் இருக்கும் என தெரிகிறது. யதார்த்தமான காட்சிகள் கவனம் பெறுகின்றன. சென்சாருக்குப் பிறகு ‘வடக்கன்’ என்ற வார்த்தை ட்ரெய்லரில் ‘ம்யூட்’ செய்யப்பட்டுள்ளது. படம் இம்மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரயில்: பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள படம் ‘ரயில்’. இப்படத்துக்கு முன்னதாக ‘வடக்கன்’ என தலைப்பிடப்பட்டிருந்தது. தணிக்கை அதிகாரிகள் தலைப்பை மாற்ற சொன்னதை அடுத்து படத்துக்கு ‘ரயில்’ என பெயர் மாற்றம் செய்யபட்டது. படத்தில் குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ளனர்.

ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ளார். எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்