என்னை யாரும் காதலிக்கவில்லை: ஆனந்தி பேட்டி

By மகராசன் மோகன்

‘கயல்’, ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’, சற்குணம் இயக்கத்தில் புதிய படம் என்று கோலிவுட்டை தன் மாய வலைக்குள் சிக்க வைத்திருக்கும் தெலுங்கு தேசப் பறவை ஆனந்தி, நிற்பதற்குகூட நேரமில்லாமல் பரபரப்பாய் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அவரை சற்குணம் இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தோம்.

தமிழில் உங்கள் முதல் படமான ‘பொறி யாளன்’ வெளியாவதற்கு முன்பே பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டீர்கள். இதனால் மற்ற நடிகைகள் வம்புக்கு வந்திருப்பாங்களே?

அதெல்லாம் இல்லை. எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று தமிழ் சினிமா. அப்படிப்பட்ட தமிழ் சினிமாவுக்குள் அதிகம் கஷ்டப்படாமல் நுழைந்த பெண் நான். ‘பொறியாளன்’ படத்தில்தான் நான் முதலில் நடிக்க ஒப்பந்தமானேன். அந்தப் படத்தில் நடிக்கத் தொடங்கிய 10 நாட்களில் பிரபுசாலமனின் ‘கயல்’ படத்தின் ஆடிஷனுக்கு போக வாய்ப்பு அமைந்தது. அவர்தான் ரக்‌ஷிதாவாக தெலுங்கில் நடித்து வந்த என் பெயரை ஆனந்தி என்று மாற்றினார். ‘கயல்’ படத்தின் கதையையும் விவரித்தார். இப்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ஒரு படம், அதர்வா ஜோடியாக ஒரு படம் என்று அடுத்தடுத்து பயணத்தைத் தொடர்கிறேன்.

‘கயல்’ தலைப்புக்கு ஏற்றாற்போல உங்க கண்கள் கவிதை சொல்கிறதே?

அந்தப்படத்தில் கிட்டத்தட்ட 5 காட்சிகளில் மட்டும்தான் நான் வசனம் பேசுவேன். மற்ற எல்லா இடங்களிலும் என் கண்கள்தான் பேசும். ஏதாவது ஒரு இடத்தில் நான் வசனம் பேச முயற்சி செய்தாலும், ‘வேண்டாம்.. உண் கண் அசைவுகள் மட்டும் போதும்’ என்று பிரபுசாலமன் தடுத்து விடுவார். படம் முழுக்க என்னைவிட என் கண்களே அதிகம் நடித்திருக்கும்.

அதர்வாவின் ஜோடியாக நடித்து வரும் படம், இயக்குநர் பாலாவின் தயாரிப்பாச்சே. உங்கள் நடிப்பு பற்றி அவர் ஏதும் சொன்னாரா?

அவர் இன்னும் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வரவில்லை. அவரோட பேனரில் நடிப்பதை சந்தோஷமாக நினைக்கிறேன். கண்டிப்பாக என் நடிப்பு அவருக்கு பிடிக்கவேண்டும் என்கிற பொறுப்போடு நடித்து வருகிறேன்.

என்ன படிச்சிருக்கீங்க?

பிளஸ் டூ முடித்துவிட்டு ஹைதரா பாத்தில் ஃபேஷன் டிசைனிங் சேர்ந்திருக் கிறேன். படிப்பதற்கு நேரமில்லையே என்பதுதான் இப்போதைக்கு என் பெரிய கவலை. இருந்தாலும் படிப்பை விடமாட்டேன்.

பைலட் ஆக ஆசை இருப்பதாக ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறீர்களே?

நடிக்க வராமல் இருந்திருந்தால் நிச்ச யம் இந்த பேட்டியை ஒரு பைலட்டாகத் தான் கொடுத்திருப்பேன். அந்த ஆசை இன்னும் தீர்ந்து போகவில்லை. இருந்தாலும் நடிப்பு எனக்கு எதிர்பாராத ஆனந்தத்தை கொடுத்திருக்கிறது.

சினிமாவில் நடிக்க வீட்டில் அவ்வளவு எளிதில் சம்மதம் கிடைத்திருக்காதே?

எங்கள் வீட்டில் எந்த ஒரு கட்டுப் பாடும் இருந்ததில்லை. சின்ன வயதில் இருந்தே என்னோட கலை ஆர்வத்தை வீட்டில் ஊக்குவித்தார்கள். அவர்களின் தூண்டுதலால்தான் இப்போது இந்த இடம் வரைக்கும் வந்திருக்கிறேன்.

வீட்டில் ரொம்பவே கோபப்படுவீங் களாமே?

என்னவோ தெரியலை. சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் வருகிறது. ஆனால், அந்த கோபத்தை எல்லாம் ஒரு மணி நேரத்துக்குள் ரப்பர் வைத்து அழித்துவிடுவேன். அதுதான் என்னோட பிளஸ்.

கொஞ்சம் பிஸியானதுமே, உங்களைப் போன்ற நடிகைகளை பிடிக்க முடிவ தில்லையே?

நான் அப்படி எல்லாம் இருக்கமாட்டேன். இப்போது எல்லோரிடமும் எப்படி பழகி வரு கிறேனோ அதேபோல்தான் எப்போதும் இருப்பேன். நீங்க வேணும்னா என்னோட பள்ளிக்கூட தோழிகளை விசாரிச்சு பாருங்க.

பள்ளி நாட்களில் பசங்க காதல் அம்புகளை எய்திருப்பார்களே?

பள்ளியில் வகுப்புத்தலைவி நான்தான். அதனால் பசங்க என்கிட்ட பேசவே பயப்படுவாங்க. அதனாலேயே என்னை யாரும் காதலிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE