‘ஜெயிலர் 2’ முதல் ‘கைதி 2’ வரை: 2-ம் பாகமாக உருவாகும் 20 திரைப்படங்கள்!

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ் சினிமாவில் 2 மற்றும் அடுத்தடுத்தப் பாகங்களாக ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

ஒரு படம் ஹிட்டானால் அதன் அடுத்த பாகத்தை உருவாக்குவது சினிமாவில் வழக்கமான ஒன்று. அந்த வகையில், சிங்கம் 2, சிங்கம் 3, சாமி 2 போல பல ஹிட் படங்கள் அடுத்தடுத்த பாகங்களைக் கண்டுள்ளன. சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா நடித்த ‘அரண்மனை 4’ சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்து வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ வர இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ விரைவில் தொடங்க இருக்கிறது. அவர் நடிப்பில் ‘கைதி 2’ அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகச் சொல்கிறார்கள். ஜெயம் ரவி நடிப்பில் ‘தனி ஒருவன் 2’ அறிவிக்கப்பட்டு விட்டது. இதை ஏஜிஎஸ் தயாரிக்கிறது. அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

ரஜினியின் ஜெயிலர் 2, கமலின் விக்ரம் 2, விஷாலின் துப்பறிவாளன் 2, சூதுகவ்வும் 2, தேசிங்கு ராஜா 2, கலகலப்பு 3, சார்பட்டா பரம்பரை 2, இன்று நேற்று நாளை 2, பிசாசு 2, பிச்சைக்காரன் 3, 7ஜி ரெயின்போ காலனி 2, பீட்ஸா 4, காஞ்சனா 4 உட்பட 20-க்கும் மேற்பட்ட படங்கள் அடுத்த பாகங்களின் வரிசையில் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE