இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு இளையராஜா பயோபிக் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
‘கேப்டன் மில்லர்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் தானே இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தை முடித்துள்ளார். அடுத்து அவர், சேகர் கமுலா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தனுஷ் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்துக்கு ‘இளையராஜா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குகிறார். கனெக்ட் மீடியா, பிகே ப்ரைம் புரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில் ஹார்மோனியப்பெட்டியுடன் மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் ஒரு இளைஞர் இசை கச்சேரி நடத்துவது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. எளிமையான போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
» பாலா - அருண் விஜய்யின் ‘வணங்கான்’ ஜூலையில் ரிலீஸ்!
» கமல் என்ட்ரி முதல் லோகேஷ் கனகராஜ் பேச்சு வரை: ‘இந்தியன் 2’ இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago