நீட், நீட், நீட்... - விதார்த்தின் ‘அஞ்சாமை’ பட ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: விதார்த் நடித்துள்ள ‘அஞ்சாமை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ட்ரெய்லர் முழுவதும் உள்ள நீட் தொடர்பான வசனங்களும், காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - நாடக கலைஞரான விதார்த்தின் மகன் மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார். விதார்த்தின் மனைவியாக வாணி போஜன் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரை தனது யதார்த்தமான தோற்றத்தில் பிரதிபலிக்கிறார். ரஹ்மான் வழக்கறிஞராக சர்ப்ரைஸ் கொடுக்கிறார். நீட் தேர்வையும், அதன் பாதிப்புகளையும், கோச்சிங் சென்டர்களின் ஆதிக்கத்தையும் ட்ரெய்லர் அழுத்தமாக பேசுகிறது.

குறிப்பாக “கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு கைக்கூலியாகி நாட்டையே விற்கிறார்கள்”, “அவன் சொல்றத தான் படிக்கணும்னு ஆயிடுச்சு”, “உயிர் பலி வாங்கிய நீட்”, “பள்ளியில் படித்த பின்பு, அந்த கல்வி தகுதியில்லை என்றால் ஏன் பள்ளிக்குச் செல்ல வேண்டும்”, “தமிழ்நாடு மட்டும் ஏன் நீட் தேர்வுக்கு ஒப்புகொள்ளவில்லை” போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அஞ்சாமை: ‘இறுகப்பற்று’ படத்துக்குப் பிறகு நடிகர் விதார்த் அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘அஞ்சாமை’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும், இப்படத்தை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார். இவர் இயக்குநர் மோகன் ராஜா, இயக்குநர் லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் நீட் தேர்வு குறித்து பேசும் முதல் படம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

வணிகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்