நிலக்கோட்டை: மறைந்த திரைப்பட இயக்குநர் சூர்ய பிரகாஷின் உடல் அவரது சொந்த ஊரான நிலக்கோட்டை அருகே எஸ்.வாடிப்பட்டி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே எஸ்.வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்ய பிரகாஷ். நடிகர் சரத்குமார் நடித்த ‘மாயி’, ‘திவான்’, ராஜ்கிரண் நடித்த மாணிக்கம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு வசந்தமலர் என்ற மனைவியும், சோனா என்ற மகளும் உள்ளனர். இவர், சென்னையில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
திரைப்பட இயக்குநர் சூர்ய பிரகாஷ் மறைவுக்கு பல்வேறு இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். சென்னையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள எஸ. வாடிப்பட்டி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இங்கு கிராம மக்கள் திரளானோர் இயக்குநர் சூர்ய பிரகாஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் எஸ்.வாடிப்பட்டியில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago