ரஜினியின் அடுத்த படம்!

By ஸ்கிரீனன்

'கோச்சடையான்' படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தினைப் பற்றிய செய்தி இணையத்தினை கலக்கி வருகிறது.

இந்நிலையில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தினை யார் இயக்கவிருக்கிறார், நாயகிகள் யார் என்பது பற்றி படக்குழுவிடம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்..

ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படத்தினை கே.எஸ்.ரவிகுமார் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் கதை, வசனம் பொறுப்பை பொன். குமரன் ஏற்று இருக்கிறார். பிரியாமணி நடிப்பில் வெளியான 'சாருலதா' படத்தினை இயக்கியவர் பொன். குமரன் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கவிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார். 20ம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மைசூரில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

படத்தில் இரண்டு நாயகிகள் உண்டு. அனுஷ்கா மற்றும் சோனாக்‌ஷி சின்கா என இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அனுஷ்கா பச்சைக்கொடி காட்டினாலும், சோனாக்‌ஷி சின்கா தரப்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்