ஏ.ஆர்.ரஹ்மானின் காதல் கானா: தனுஷின் ‘ராயன்’ 2-வது சிங்கிள் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

பாடல் எப்படி? - ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடலை சந்தோஷ் நாராயணன், ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். கானா காதர் பாடலை எழுதியுள்ளார். இப்பாடல் சந்தீப் கிஷனுக்கும் - அபர்ணா பாலமுரளிக்கும் இடையிலான காதல் பாடலாக உருவாகியுள்ளது. கானா கலந்த காதல் பாடல் என்றாலே அதற்கு அத்தனை பொறுத்தமானவர் சந்தோஷ் நாராயணன்.

அவரின் குரல் தேர்வு அம்சம். ‘நீ இருக்குறீயே ஓலக் கோட்டாயா’ என தொடங்கும் இப்பாடல் வழக்கமான கானா பாடல் என்ற மீட்டரில் உள்ளது. அதைத் தாண்டி ஈர்க்கக்கூடிய பாடல் வரிகள் மிஸ்ஸிங். மேலும், “வாட்டமா இருக்குறீயே வாட்டர் பாக்கெட் மூஞ்சி” போன்ற பெண்ணை வர்ணிக்கும் படியான வரிகள் நெருடல். சில இடங்களில் வரிகள் இசையுடன் பிணையாமல் தனியே தொக்கி நிற்பதை உணர முடிகிறது.

ராயன்: தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூன் மாத இறுதியில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இப்படத்தின் முதல் சிங்கிளான ‘அடங்காத அசுரன்’ வெளியானது குறிப்பிடத்தக்கது. பாடல் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்