சென்னை: கார்த்தி நடிக்கும் புதிய படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
கார்த்தியின் 25-வது படமாக வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக, அவர் நலன் குமாரசாமியுடன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘96’ பட புகழ் ப்ரேம்குமார் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
கார்த்தியின் 27-வது படமான இப்படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
» ‘குணா’ பாடலுக்கு அனுமதி பெற்றுள்ளதாக ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ தயாரிப்பாளர் விளக்கம்
» ‘PT சார்’ Review: அழுத்தமான கதைக்களத்தில் கிடைத்ததா பாஸ் மார்க்?
அரவிந்த் சாமி சைக்கிள் ஓட்டுவது போலவும், கார்த்தி அவருக்கு பின்னால் அமர்ந்திருப்பது போலவும் காட்சியளிக்கும் போஸ்டர் ஒருவித நாஸ்டால்ஜி தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் ஒன்றும் பின்ணனியில் உள்ளது. படத்தின் முதல் தோற்றம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago