“சிறு வயதில் கமல்ஹாசனை போல அலங்காரம் செய்துகொள்வேன்” - பிரபாஸ் பகிர்வு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: “சிறு வயதில் கமல்ஹாசனைப் போல என்னை நானே அலங்காரம் செய்துகொள்வேன். அவருடன் தற்போது பணியாற்றுவதை பெருமையாக நினைக்கிறேன்” என நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் புரொமோஷனல் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் பிரபாஸ், “கல்கி 2898 ஏடி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகர்கள் அபிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் இருவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு லெஜண்டுகளுடனும் இணைந்து பணியாற்றியது என்னுடைய அதிர்ஷ்டம். வட மாநிலங்களில் மட்டுமல்லாமல், தென் மாநிலங்களிலும் அமிதாப் பச்சனுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு. அவரை நினைத்து நான் பெருமை கொள்ள வேண்டும். கமல்ஹாசனும் மிகப்பெரிய நடிகர்கள். இந்த இருவருக்கும் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

என்னுடைய சிறுவயதில் கமல்ஹாசனைப் போல உடையணிந்து என்னை நானே அலங்காரம் செய்துகொள்வேன். குறிப்பாக 1983-ல் அவர் நடிப்பில் வெளியான ‘சாகர சங்கமம்’ (Sagara Sangamam) படத்தில் அவர் அணிந்திருந்த உடைகளைப் போல நானும் தைத்துக்கொள்ள முயற்சித்தேன்.

தீபிகா படுகோனே மிகவும் அழகான சூப்பர்ஸ்டார். அவர் சர்வதேச திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அவர் இந்தப் படத்தில் நடித்தது எங்களுக்கு கிடைத்த பாக்கியம்” என தெரிவித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்