சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் ஜூன் 13-ம் தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.160 கோடிக்கு வாங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இப்படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு மாதம் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் அனிருத் இசையில் முதல் சிங்கிள் வரும் மே 22ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
Vanakkam INDIA! The 1st single from INDIAN-2 in Rockstar ANIRUDH musical is dropping on May 22nd! Get ready to welcome the comeback of SENAPATHY! Releasing worldwide in cinemas 12th July 2024! #Indian2
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago