சென்னை: இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிகர் மம்மூட்டியை வைத்து மலையாளத்தில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் மம்மூட்டி இயக்கத்தில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள மலையாள படம் ‘டர்போ’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் ‘பஸூகா’ (Bazooka) படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தீனோ டென்னிஸ் இயக்கியுள்ளார்.
இதில் மம்மூட்டியுடன், கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ளார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்து மம்மூட்டி லைன்அப்பில் இருக்கும் ‘கடுகன்னவா ஒரு யாத்ர குறிப்பு’ (Kadugannava: Oru Yathrakurippu) படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனனை பொறுத்தவரை அவரது இயக்கத்தில் கடைசியாக ‘ஜோஷ்வா’ திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து அவர், மம்மூட்டியை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் நயன்தாரா படத்தில் இணையலாம் என கூறப்படுகிறது. படத்தை மம்மூட்டியே தயாரிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியானால், கவுதம் மேனனின் முதல் மலையாள படமாக இது இருக்கும்.
» சனல் குமார் சசிதரன் Vs டோவினோ தாமஸ் - ‘வழக்கு’ பட ரிலீஸ் பிரச்சினையில் நடப்பது என்ன?
» மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளதா? - பிருத்விராஜ் பதில்
கவுதம் மேனன் அளித்த பேட்டி ஒன்றில், “மலையாளத்தில் படம் இயக்கலாமா என யோசித்து வருகிறேன். சில நடிகர்களுடன் அது தொடர்பாக பேசி வருகிறேன். குறிப்பாக மம்மூட்டி அல்லது ஃபஹத் ஃபாசிலை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை” என தெரிவித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago