சொத்து விவகாரம்: நடிகர் கவுண்டமணிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: சொத்து விவகாரம் தொடர்பான வழக்கில், நடிகர் கவுண்டமணிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் 1996-ல் நடிகர் கவுண்டமணி ஐந்து கிரவுண்டு நிலம் ஒன்றை வாங்கினார். இந்த நிலத்தில் 22,700 சதுர அடியில் வணிக வளாகம் கட்ட ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள கவுண்டமணி, அதற்காக ரூ.1 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளார். ஆனால், ஒப்பந்தப்படி 2003 வரை கட்டுமான பணி தொடங்கவில்லை என்பதால் ஒப்பந்தத்தை ரத்து செய்து நிலத்தை திரும்ப அளிக்க வேண்டும் எனக் கூறி கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு நடிகர் கவுண்டமணிக்கு சாதகமாக வந்தது. சம்பந்தப்பட்ட நிறுவனம், கவுண்டமணியிடம் பெற்ற நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைத்துவிட்டு, 2008 ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் கட்டுமான நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்