சென்னை: 11 வருட திருமண வாழ்க்கையிலிருந்து பிரிய முடிவு செய்திருப்பதாக ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு நானும் சைந்தவியும் 11 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய முடிவு செய்திருக்கிறோம். எங்களுடைய மன அமைதிக்காகவும், நன்மைக்காகவும், அதே நேரம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும்.
மிகவும் தனிப்பட்ட இந்த் மாற்றத்தின் போது எங்களுடைய பிரைவசியை மதித்து புரிந்துகொள்ளுமாறு ஊடகத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் தனித்தனியாக வளர்ந்து கொண்டிருப்பதை மனதில் கொண்டு, இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமாக காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி” இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதே போன்ற ஒரு அறிவிப்பை சைந்தவியும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
பள்ளிகாலம் முதலே காதலித்து வந்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் 2013ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் ’எள்ளுவய பூக்கலையே’, ‘பிறைதேடும் இரவிலே’, ‘கையிலே ஆகாசம்’ உள்ளிட்ட பல்வேறு ஹிட் பாடல்களை சைந்தவி பாடியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago