நடிகர் மோகன், ஹீரோவாக நடித்துள்ள படம், 'ஹரா'. இதில் அனுமோள், கவுஷிக், யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன்
என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “மோகன் பற்றி யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்றுள்ளது. சினிமாவுக்கென சில பழக்கங்கள் இருக்கும், சம்பிரதாயங்கள் இருக்கும். அதில் எதிலும் மோகன் கலந்துகொள்ள மாட்டார். எப்போதும் தன் வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். இன்றும் அவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
பாடல்கள்தான் அவரது பலம், இளையராஜா முதல் டி.ஆர் வரை பலர் இசையில் அவர் பாடல்கள் வெற்றி பெற்றுள்ளன. எத்தனையோ இசையமைப்பாளர்கள் இசையில், எத்தனையோ பேர் நடித்திருந்தாலும், மோகன் நடிக்கும் போது மட்டுமே பாடலை அவரே பாடுவது போல் இருக்கும்.
இந்தக் குணத்தை சிவாஜிகணேசனிடம் பார்த்திருக்கிறேன். ஒரு இந்தி நடிகரிடமும் பார்த்திருக்கிறேன். அவர்களுக்குப் பிறகு மோகன் தான் அதில் தன்னை நிரூபித்துள்ளார்” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago