அதர்வா, நிமிஷா சஜயனின் ‘டிஎன்ஏ’ முதல் தோற்றம் வெளியீடு!

By செய்திப்பிரிவு

சென்னை: அதர்வா நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ஒருநாள் கூத்து’, ‘ஃபர்ஹானா’ ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படத்துக்கு ‘டிஎன்ஏ’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிகர்கள் அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நடிக்கின்றனர்.

ஒலிம்பியா மூவிஸ் அம்பேத் குமார் படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளரின் பெயர் முதல் தோற்றத்தில் இடம்பெறவில்லை. அதனால் இசையில்லாமல் உருவாகும் புது முயற்சி கொண்ட படமா? அல்லது மறந்து பெயர் விடுபட்டதா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

முதல் தோற்றம் எப்படி?: போஸ்டரை பொறுத்தவரை 72 ஹவர்ஸ் என எழுதப்பட்டு முறைத்துக் கொண்டிருக்கிறார் அதர்வா. மற்றொருபுறம், அதர்வா, நிமிஷாவின் ரொமான்டிக் புகைப்படமும் உள்ளது. காதலை அடிப்படையாக கொண்ட த்ரில்லராக இருக்கலாம் எனத் தெரிகிறது. அதர்வாவுக்கு வெற்றி தேவைப்படும் நிலையில் இந்தப் படம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்