‘மேதகு’ பட இசையமைப்பாளர் பிரவீன் குமார் 28 வயதில் காலமானார்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘மேதகு’, ‘ராக்கதன்' உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28.

2021-ஆம் ஆண்டு கிட்டு இயக்கத்தில் வெளியான படம் ‘மேதகு’. லிசி ஆண்டனி, வினோத் சாகர் உள்ளிட்டோர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பிரவீன் குமார். இப்படத்தைத் தொடர்ந்து ‘மேதகு 2’, ‘ராக்கதன்’, ‘கக்கன்’ உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரவீன் குமார், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அங்கிருந்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு அண்மையில் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்தச் சூழலில், இன்று (மே.02) சிகிச்சை பலனின்றி பிரவீன் குமார் உயிரிழந்தார். பிரவீன் குமாரின் மறைவுக்கு நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்