சென்னை: ரஜினியின் 'கூலி' படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ரஜினி நடிக்கும் 'வேட்டையன்' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது.
இப்படத்துக்கான டைட்டில் அறிவிப்பு டீசரை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இதில் 1983ல் ரஜினி நடித்த ‘தங்கமகன்’ படத்தில் இளையராஜா இசையமைத்த ‘வாவா பக்கம் வா’ பாடலின் ‘டிஸ்கோ’ இசை பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த இசை தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக சன் பிக்சர்க்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ’வா வா பக்கம் வா’ பாடலின் அனைத்து விதமான உரிமையும் இளையராஜாவிடமே உள்ளது என்றும், எனவே அந்த பாடலை பயன்படுத்த முறையான அனுமதி பெற வேண்டும், இல்லையெனில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்றும் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதற்குமுன் வெளியான ‘விக்ரம்’, ‘ஃபைட் கிளப்’ உள்ளிட்ட படங்களிலும் தன்னுடைய இசை முறையான அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக இளையராஜா அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
50 secs ago
சினிமா
8 mins ago
சினிமா
21 mins ago
சினிமா
29 mins ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago