சென்னை: கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீடா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’, ‘சர்காரு வாரி பாட்டா’, ‘வாஷி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதில் ‘சாணிக் காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பில் பாராட்டப்பட்டது. இதையடுத்து தெலுங்கில் நானியுடன் ‘தசரா’ படத்திலும், தமிழில் ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதியுடனும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர காத்திருக்கும் படங்களில் ‘ரிவால்வர் ரீடா’வும் ஒன்று. இயக்குநர் சந்துரு இயக்கும் இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago