சென்னை: கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல் ஆகிய பாலிவுட் நடிகர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசனும் மணிரத்னமும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தானில் நடந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, இப்போது டெல்லியில் நடந்து வருகிறது. இப்படத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு பதிலாக சிம்பு நடிப்பதாகவும், அவர் நடிக்கும் காட்சிகள் டெல்லியில் படமாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
டெல்லியில் 15 நாட்கள் படப்பிடிப்பில் கமல்ஹாசன், த்ரிஷா, அரவிந்த்சாமி, ஐஸ்வர்யா லட்சுமி பங்கேற்கும் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படத்தில் பாலிவுட் நடிகர்கள் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
» ‘உறியடி’ விஜய்குமாரின் ‘எலக்சன்’ மே 17-ம் தேதி வெளியீடு
» நாசர் பெயரில் பொதுமக்களிடம் நிதி கோரி மோசடி: நடிகர் சங்கம் போலீஸில் புகார்
இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ‘மிர்சாபூர்’ இணையத் தொடர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பில் இவர்கள் இருவரும் பங்கேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago