சென்னை: விஜய் நடிப்பில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (கோட்)’ என்ற படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. விஜய்யின் 68-வது திரைப்படமான இதில், மோகன், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் டைட்டில் டீஸர் சமீபத்தில் வெளியானது. இதற்கு, நடிகர் கார்த்திக் குமார், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், இப்போது வரும் மாஸ் படங்களின் டிரெய்லர்கள் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கின்றன. அந்த நடிகர்கள் ஏற்கெனவே நடித்த பழைய படங்களில் இருந்து வசனங்கள் வைக்கப்படுகின்றன. மக்கள் வித்தியாசமாக எதிர்பார்க்கின்றனர்” என்று கூறியிருந்தார்.
அவர் ரஜினியின், ‘கூலி’ பட டீஸரைதான் சொன்னார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த வீடியோவை, இயக்குநர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
அதில் "இது கமர்சியல் திரைப்படங்களை எடுக்கும் எங்களைப் போன்றவர்கள் பற்றியது தான். கார்த்திக் கூறுவதும் உண்மைதான். நாங்கள் எங்களுடைய இந்த கமர்சியல் பாணியில் இருந்து வெளியேறி வேறுவிதமாக படங்களை எடுத்தால் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago