ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து1996-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட படம், ‘இந்தியன்’. அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் ஜூன் 13-ம் தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.160 கோடிக்கு வாங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு தமிழ்ப்படத்துக்குக் கிடைத்த அதிகப்பட்ச தொகை இது என்கிறார்கள். லைகா நிறுவனமும் ரெட் ஜெயண்ட் மூவிஸும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, மே மாதம் 16-ம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கிறது.
இதில் நடிகர் ரஜினிகாந்த், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். தெலுங்கு நடிகர் ராம் சரணும் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago