சென்னை: சமுத்திரக்கனி, ஹரிஷ் உத்தமன், பிருத்விராஜ், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ராமம் ராகவம்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தை தன்ராஜ் இயக்கியுள்ளார். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் சார்பில் பிருத்தவி போலவரபு தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இயக்குநர்கள் பாலா, பாண்டிராஜ், நடிகர்கள் தம்பி ராமையா, பாபி சிம்ஹா, சூரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சமுத்திரக்கனி பேசும்போது, “ இது அப்பாவுக்கும் மகனுக்குமான கதையை பற்றிய படம். ஒவ்வொரு தகப்பனும் ஒரு சகாப்தம். பத்து அப்பா படம் பண்ணிவிட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. இதுவும் வேறொரு கதை. இதன் இயக்குநர் தன்ராஜ், தானே உழைத்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். அப்பா என்றாலே ஒரு வேதியல் மாற்றம் நிகழும். அப்பா கதை என்றால், வாங்க கேட்போம், பண்ணுவோம் என்று சொல்லி விடுவேன். தகப்பனுக்கும் மகனுக்கும் உள்ள உறவுக்குள் அவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. இன்னும் 10 அப்பா பற்றிய படங்கள் கூட பண்ணலாம். இந்தப் படத்துக்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் பாலா பேசும்போது, “ சமுத்திரக்கனி நடிகனாக நிரூபித்து விட்டார். அவர் உழைப்புக்கு நான் ரசிகன். கடுமையாக உழைக்கக் கூடியவர். மற்றவர்களுக்கு உதவும் அவர் தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். அவருக்கு பெரிய மனது இருக்கிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago