சென்னை: “விடுதலை முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகம் அனைவருக்கும் பிடிக்கும். படப் பணிகள் முடியப் போகிறது” என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் சிறப்பாக வந்துள்ளது. முதல் பாகத்தைக் காட்டிலும், இரண்டாம் பாகம் கூடுதலாக அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம். படம் கிட்டத்தட்ட முடியப்போகிறது.
இரண்டாம் பாகத்தில் வாத்தியார் (விஜய் சேதுபதி) பங்களிப்பு அதிகமாக இருக்கும். முதல் பாகத்தில் எதிர்பார்த்தவர்களுக்கு, இந்த பாகத்தில் அவர் கதாபாத்திரம் நிறைவாக இருக்கும். அதேபோல, ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வெளிநாடுகளில் திரையிடப்படப்பட்டு, அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் இங்கே திரையரங்குகளில் வெளியாகும்” என்றார்.
“வாக்களிக்க முடியவில்லை என்று சொன்னீர்கள். அதன்பிறகு அது குறித்து யாராவது தொடர்பு கொண்டு பேசினார்களா?” என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “இம்முறை வாக்களிக்க முடியவில்லை. அடுத்த முறை அந்தப் பிரச்சினையை சரிசெய்துவிடுவேன்” என கூறியபடியே கிளம்பிச் சென்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago