‘தல’ தமிழ்நாட்டில் பவர்ஃபுல் வார்த்தை: அருண் விஜய்

By செய்திப்பிரிவு

சென்னை: அருண் விஜய் நாயகனாக நடிக்கும் படம் ‘ரெட்ட தல’. இதில், சித்தி இட்னானி அவர் ஜோடியாக நடிக்கிறார். தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெரேடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய்,பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்சென்ட் அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதல் தோற்றம் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

அருண் விஜய் கூறும்போது, “ ‘தடம்’ படத்துக்குப் பிறகு நான் இதில் 2 வேடங்களில்நடிக்கிறேன். ‘ரெட்ட தல’ என்ற தலைப்பைக் கேட்டதும் உற்சாகமாக இருந்தது.

தமிழ்நாட்டில் ‘தல’ என்பது பவர்ஃபுல் வார்த்தை. இந்தக் கதைக்கு இந்த டைட்டில் தேவைப்பட்டது. 2 கேரக்டரையும்இயக்குநர் அருமையாக அமைத்திருக்கிறார். முதல் தோற்றப் போஸ்டர் பார்க்கும்போதே அது தெரிந்திருக்கும். ஒவ்வொரு விஷயத்துக்கும் அதிக மெனக்கெடல்கள் இருக்கின்றன. அது சவாலானது. இது அனைவருக்கும் பெருமை சேர்க்கும்படமாக இருக்கும்” என்றார்.

இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் கூறும்போது, “அருண் விஜய் உடலை வில்லாகவளைத்து, இந்தப் படத்துக்காக உழைத்துள்ளார். இந்த ‘ரெட்ட தல’ தலைப்பு ஏ.ஆர். முருகதாஸ் சாருடையது. இந்தக்கதைக்கு இதுதான் சரியாக இருக்குமெனத் தோன்றியது. அவரிடம் கேட்டேன். வைத்துக்கொள் என அன்போடு தந்தார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்