சென்னை: சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும்படம், ‘கங்குவா’. ‘சிறுத்தை’ சிவா இயக்கும் இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்துக்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் 2 வேடங்களில் சூர்யா நடிக்கிறார். இதன் டீஸர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கிராபிக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.350 கோடி என்றும் இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது என்றும் கூறப்படுகிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலும் சம காலத்திலும் நடப்பது போல இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.
“கங்குவாவில், போர் உள்ளிட்ட ஆக்ஷன் காட்சிகள் மிரட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இது கண்டிப்பாக சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago