சென்னை: பிரபல இந்தி நடிகர் யஷ்பால் சர்மா. இவர் தமிழில் கமலின் ஆளவந்தான் படத்தில் காஷ்மீர் தீவிரவாதியாக நடித்திருந்தார். சசிகுமார் நடித்த ‘அயோத்தி’ படத்தில் வட இந்திய குடும்பத்தைச் சேர்ந்த, ஆணாதிக்க சிந்தனை கொண்டவராக நடித்திருந்தார். அவர் அளித்த பேட்டியில், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவைப் புகழ்ந்துள்ளார்.
அவர் கூறும்போது, “தமிழ், தெலுங்கு சினிமா துறையினர், எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாகவும் வேகமாகவும் இருக்கிறார்கள். மிகவும் சரியான நேரத்தில் அனைத்தும் நடக்கிறது. இந்தி சினிமா துறையில் அதை, நான் பார்த்ததில்லை.
தமிழ் சினிமா இன்னும் சிறப்பாக உள்ளது. ஏராளமான திறமையாளர்கள் அங்கு இருக்கிறார்கள். மந்திரமூர்த்தி இயக்கிய ‘அயோத்தி’ படத்தில் நான் நடித்தேன். சிறிய பட்ஜெட் படம்தான். ஆனால், விமர்சன ரீதியாக சிறந்த வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தை ரஜினிகாந்த் முதல் முக்கிய அமைச்சர்கள் வரை பாராட்டினர். இயக்குநர், உண்மையிலேயே திறமையானவர்” என்றார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், தென்னிந்திய தயாரிப்பாளர்கள் கொடுக்கும் காசோலைகள் பணமில்லாமல் திரும்புவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
43 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago