சென்னை: ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில் உருவாகும் படத்துக்கு ‘பேபி & பேபி என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்குகிறார். பிரக்யா நாக்ரா , சாய் தன்யா, கீர்த்தனா செல்வகுமார் , ஆனந்தராஜ், மன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, நிழல்கள் ரவி உட்படபலர் நடிக்கின்றனர்.
ஜிபிஎஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஜி.பி.செல்வகுமார் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார். சாரதி ஒளிப்பதிவு செய்கிறார். யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் யுவராஜ், செல்வகுமார் இணைந்து வெளியிடுகின்றனர்.
படம்பற்றி இயக்குநர் பிரதாப் கூறும்போது, “ இரண்டு குழந்தைகளைச் சுற்றி நடக்கும் காமெடி கலந்த குடும்ப கதைதான் இந்தப் படம். குடும்பத்தோடு பார்க்கும் வகையில் ஜாலியான படமாக இது இருக்கும். ஜெய்யின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். ஜோடியாக பிரக்யா நாக்ரா நடிக்கிறார். யோகிபாபு ஜோடியாக சாய் தன்யா நடிக்கிறார். முதல்கட்டப் படப்பிடிப்பை பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில் நடத்தினோம். சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. வெளிநாடுகளிலும் 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. மே முதல் வாரம் வெளிநாடு செல்ல திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago