டெல்லியில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் கமல்ஹாசனும் மணிரத்னமும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தானில் நடந்த படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இப்போது டெல்லியில் நடந்து வருகிறது. அங்கு சிம்பு நடிக்கும் காட்சிகளைப் படமாக்கினர்.

கமல்ஹாசன் தொடர்பான காட்சிகளை இன்று முதல் படமாக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. த்ரிஷா, அரவிந்த்சாமி, ஐஸ்வர்யா லட்சுமி பங்கேற்கும் காட்சிகளும் படமாக இருக்கின்றன. அங்கு 15 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. பின்னர் சென்னையில் நடக்கிறது. பிறகு படக்குழு, சைபீரியா செல்கிறது. அங்கு கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை படமாக்க இருக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்