சென்னை: விஜய் நடிப்பில் உருவான ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸில் 2 நாட்களில் ரூ.12 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ரீ - ரீலிஸ் செய்யப்பட்ட எந்த படங்களும் 2 நாட்களில் இந்த அளவு வசூலிக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘கில்லி’. விஜய்யின் கரியரில் முக்கியமான படமாக அமைந்த இப்படத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இந்தப் படம் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்.
இந்நிலையில், இப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த ஏப்.20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இப்படத்தின் முதல் காட்சியை, புதிய விஜய் படத்தின் முதல் நாள் காட்சி போல ரசிகர்கள் கொண்டாடினர். திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லானதன் எதிரொலியாக படம் முதல் நாள் ரூ.8 கோடி வசூலை குவித்தது.
இது அண்மையில் வெளியான புதிய படங்களுக்கு நிகரான வசூலாக கருதப்படுகிறது. மறுவெளியீடு படத்துக்கு இப்படியான வசூல் கிடைப்பது அரிது. 2ஆவது நாளில் படம் ரூ.4 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
படம் 2 நாட்களில் ரூ.12 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலரும் இந்தப் படத்தை ஒரு நாஸ்டால்ஜி அனுபவமாக திரையரங்குக்குச் சென்று பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
16 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago