சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’(கோட்). இதில் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்துவருகிறது. அங்கு ஆக்ஷன் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். நடிகர் விஜய், அங்கிருந்து வாக்களிப்பதற்காக சமீபத்தில் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், மாஸ்கோ ஊடகம் ஒன்றுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், 'இந்தப் படத்தில் மாஸ்கோவுக்கும் முக்கியத்துவம் உள்ளது. கதைப்படி ஹீரோவின் வாழ்க்கையில் மாஸ்கோவில்தான் பல முக்கிய திருப்பங்கள் நடக்கின்றன. தென்னிந்திய ரசிகர்கள், அதிகம் பார்த்திராத இடங்களில் படமாக்க வேண்டும் என்று நினைத்தோம். இந்திப் படங்கள் மாஸ்கோவில் படமாகி இருக்கின்றன. தென்னிந்திய திரைப்படங்களின் படப்பிடிப்பு, ரஷ்யாவில் அதிகம் நடக்கவில்லை. அதனால் இங்கு வந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
23 mins ago
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago