’ரத்னம்’ எனது 17 வது படம் - இயக்குநர் ஹரி

By செய்திப்பிரிவு

சென்னை: விஷால், இயக்குநர் ஹரி 3 வது முறையாக இணையும் படம், ‘ரத்னம்’. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர்நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டூடியோஸ் சவுத் இணைந்து தயாரித்துள்ள இதை, அலங்கார் பாண்டியன், கல்யாண் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பு செய்துள்ளனர். 26-ம் தேதி வெளியாகும் இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் நடந்தது.

நிகழ்ச்சியில் விஷாலின் தேவி பவுண்டேஷ‌ன் சார்பில் இரு பெண் குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்யப்பட்டது. இயக்குநர் ஹரி கூறும்போது, “இது எனது 17-வது படம். விஷாலுடன் மூன்றாவது படம். இந்தப்படம் இந்தக்கால பார்வையாளர்களுக்கு பிடிக்கும் வலையில், 60 %ஆக் ஷன் 40 % கமர்ஷியலாக இருக்கும். இதில் பணியாற்றிய சிங்கிள்ஷாட் பற்றி பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரே ஷாட்டில், எட்டு ஆக்‌ஷன் சீக்குவன்ஸ் எடுத்தோம். நான்கு ஸ்டன்ட் மாஸ்டர்கள் அதை செய்தனர். 3.5 கிமீ தூரத்துக்கு 4 இடங்களில் மாறி மாறி ஹீரோ, ஹீரோயினோடு சென்று ஆக்ஷன் செய்துள்ளார்.

இதற்காக விஷால் கடுமையாக உழைத்திருக்கிறார். ஒரு நாள் முழுக்க ரிகர்சல் பார்த்து, மூன்றாவது ஷாட்டில் இதை எடுத்து முடித்த போது தான் நிம்மதியாக இருந்தது. இந்தப் படம் பார்க்கும் போது உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்