சென்னை: நடிகர் விக்ரம் ‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமாருடன் இணையும் புதிய படத்துக்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
‘சித்தா’ இயக்குநர் எஸ்.யு.அருண்குமார், அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார். விக்ரமின் 62-வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்துக்கு ‘வீர தீர சூரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
வீடியோ எப்படி? - 3.45 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் முழுக் காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இரவு நேரத்தில் மளிகை கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விக்ரமை கொல்ல சிலர் திட்டமிடுகிறார்கள். அவர்களை விக்ரம் எதிர்கொள்ளும் அந்தக் காட்சி ரசிக்க வைக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், மஞ்சள் நிற ஒளியில் படமாக்கப்பட்ட விதமும்.
இந்த வீடியோவில் விக்ரமின் தோற்றம் கவனிக்க வைக்கிறது. படத்தின் டைட்டிலில் இரண்டாம் பாகம் என குறிப்பிடப்படுகிறது. இதன் முந்தைய பாகம் அடுத்து வெளியாகும் என தெரிகிறது. வீடியோ:
» பிரச்சாரக் களத்தில் மன்சூர் அலிகானுக்கு உடல்நல பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி
» ஈர்க்கும் காட்சிகள், மிரட்டும் லுக்... - விக்ரம், பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ வீடியோ எப்படி?
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago