ஹைதராபாத்: நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கும் படம், ‘குபேரா’. பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தனுஷ், பிச்சைக்காரன் தோற்றத்தில் இருக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இது, மும்பை தாராவியில் நடக்கும் கதை என்று கூறப்படுகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் கர்மிகோண்டா நரேந்திரா என்பவர், இதே தலைப்பை தெலங்கானா திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்து வைத்துள்ளார். குபேரா தலைப்பை தனுஷ் படத்துக்கு வைத்துள்ளது பற்றி, திரைப்பட வர்த்தக சபையில் நரேந்திரா முறையிட்டுள்ளார். அவருக்குச் சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லை. இதனால் அவர் வழக்குத் தொடர இருப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago