‘கேம்பைன தான் தொறக்கட்டுமா...மைக்க எடுக்கட்டுமா’ - விஜய்யின் ‘தி கோட்’ பட சிங்கிள் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் நடிக்கும் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

முதல் சிங்கிள் எப்படி?: ‘பார்டி ஒன்னு தொடங்கட்டுமா’ என தொடங்கும் இப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடலின் ஆரம்பத்தில் ‘கேம்பைனை தான் தொடங்கட்டுமா...மைக்க கையில் எடுக்கட்டுமா’ என வரும் வரிகள் தேர்தல் குறியீடு.

உற்சாகமான பீட்டுடன் தத்துவ வரிகள் அடங்கிய பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜாலியான பாடலில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் இணைந்து நடனமாடும் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து. ஆனாலும் பாடல் வரிகள் பீட்டில் பொருந்தாமல் தனித்து இருப்பது போன்ற உணர்வு எழுகிறது. ரசிகர்கள் பாடலை ஷேர் செய்து வருகின்றனர்.

முதல் சிங்கிள் வீடியோ;

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்