சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் முதல் சிங்கிள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புரொமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் நாளை மாலை 6மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
» “நாளை சம்பவம் உறுதி” - வெங்கட் பிரபு கொடுத்த ‘தி கோட்’ அப்டேட்
» ‘அனிமல்’ படத்தை பார்க்க முடிகிறது... ‘சித்தா’வை பார்க்க முடியவில்லையா? - சித்தார்த் ஆதங்கம்
இப்பாடலை விஜய் பாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவில், விஜய் குரலில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ என்ற வார்த்தை ஒலிக்க உற்சாகமான பின்னணி இசை தெறிக்க விடுகிறது. விஜய்யின் ‘இன்ட்ரோ’ பாடலாக இருக்கும் என தெரிகிறது. இந்த வீடியோ பாடலின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. புரொமோ வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago