திகிலூட்டும் காட்சிகள்... அறிவழகன் - ஆதி கூட்டணியில் ‘சப்தம்’ டீசர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: ‘ஈரம்’ பட இயக்குநருடன் ஆதி கைகோத்துள்ள ‘சப்தம்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் ‘ஈரம்’. அப்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அறிவழகன் - ஆதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘சப்தம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை அறிவழகனே தயாரிக்கிறார். ஹாரர் - த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசர் எப்படி? - மொத்த டீசரும் ஒருவித திகில் அனுபவத்தை கொடுக்கிறது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப சப்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியான ஹாரர் படங்களில் யேசுவும், சர்ச்சும் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அவை இதிலும் தவறாமல் இடம்பெறுகின்றன. பின்னணி இசை நம்பிக்கை அளிக்கிறது.

சிம்ரன் நடுவே வந்து செல்கிறார். அமானுஷ்யம், கோரமான காட்சிகள், கணிக்க முடியாமல் கடக்கும் ‘கட்ஸ்’ டீசரை விறுவிறுப்பாக்கியுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. டீசர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்