சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஓபனிங் பாடலுக்கான படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே வரும் ஏப்.25ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் இப்போது நடித்து வருகிறார். ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில், ராணா நடிக்கும் காட்சிகள் இப்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடந்து வருகிறது. இதையடுத்து வரும் 25-ம் தேதி இந்தப் படத்தின் ஓபனிங் பாடல் காட்சியைப் படமாக்க இருக்கின்றனர். பூந்தமல்லி அருகே இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக சிறப்பு அரங்கம் அமைக்கப்படுகிறது.
இதையடுத்து ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் டைட்டில் டீஸர் வரும் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago