சென்னை: அபிஷேக் நாமா, கதை, திரைக்கதை, எழுதி இயக்கும் படத்துக்கு ‘நாகபந்தம்–தி சீக்ரெட் ட்ரெஷர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை, அபிஷேக் பிக்சர்ஸ், தண்டர் ஸ்டூடியோவுடன் இணைந்து தயாரிக்கிறது. ஆன்மிக மற்றும் சாகசங்கள் நிறைந்த படமான இதற்கு சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். அபே இசை அமைக்கிறார். இதன் டைட்டில் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் மர்மமான அகோரியாக கே.ஜி.எஃப் அவினாஷ், கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது. மிரட்டும் விஎஃப்எக்ஸ் காட்சிகளுடன் வெளியான இந்த டீஸர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாகவும் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago