சென்னை: பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் 9 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது. முன்னதாக, மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘ப்ரேமலு’ ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலை எட்டியது குறிப்பிடத்தக்கது.
மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பான் இந்தியா முறையில் வெளியான இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.80 கோடி என கூறப்படுகிறது. படம் மார்ச் 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் படம் ரூ.16 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது படம் வெளியாகி 9 நாட்களை கடந்துவிட்ட நிலையில், உலகம் முழுவதும் படம் ரூ.100 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டு வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘பிரேமலு’ ஆகிய மலையாள படங்கள் ரூ.100 கோடியை வசூலித்தன. அந்த வகையில், இது மலையாளத்தில் நடப்பு ஆண்டின் 3-வது ரூ.100 கோடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago