நடிகர் அஜித் உடன் பிறந்தநாளைக் கொண்டாடிய சன்ரைசர்ஸ் வீரர் நடராஜன்! - புகைப்படங்கள் வைரல்

By செய்திப்பிரிவு

சென்னை: சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் வீரர் நடராஜன் தனது பிறந்தநாளை நடிகர் அஜித்குமாருடன் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக தமிழக வீரர் நடராஜன் ஆடி வருகிறார். இவர் இன்று (ஏப்.4) தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதற்கான பிறந்தநாள் விழா ஹைதராபாத்தில் நள்ளிரவில் நடைபெற்றது. இதில் நடராஜன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த விழாவில் நடிகர் அஜித் கலந்து கொண்டு நடராஜனை வாழ்த்தினார். இருவரும் மாறி மாறி கேக் ஊட்டிக் கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மத்திய பிரதேசத்துக்கு பைக் பயணம் சென்றிருந்த அஜித் அண்மையில் அங்கிருந்து திரும்பி வந்தார். விரைவில் ‘விடாமுயற்சி’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்