விவசாயிகளின் பிரச்சினையை சொல்லும் ‘பரமன்’

By செய்திப்பிரிவு

சென்னை: ‘முண்டாசுப்பட்டி’, ‘பரியேறும் பெருமாள்' ‘ஜெய்பீம்' உட்பட பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி, கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘பரமன்’.

பழ.கருப்பையா, வையாபுரி, ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் கதையை இதயநிலவன் எழுதியுள்ளார். சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தமீம் அன்சாரி இசை அமைத்துள்ளார். மறைந்த நடிகை விஜே சித்ரா நடித்த ‘கால்ஸ்’ படத்தை இயக்கிய சபரிஸ், இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது, “ நான் இயக்கிய கால்ஸ் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம், பரமன் என்கிற விவசாயி ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லுகிறது. சமூகத்துக்குத் தேவையான கதை. விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளை எந்த மிகைப்படுத்தலும் இன்றி சொல்லி இருக்கிறேன். பழ.கருப்பையா வில்லனாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடந்துள்ளது” என்றார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.ஏ.சந்திரசேகர், பி.வாசு, சீமான் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

34 mins ago

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்