பெண்மையை போற்றும் ‘கேன்’

By செய்திப்பிரிவு

சென்னை: சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆடம்ஸ் இயக்குநராக அறிமுகமாகும் படத்துக்கு ‘கேன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரணவி மனுகொண்டா, அக்‌ஷரா ராஜன், கவுசல்யா, யாஷிகா ஆனந்த், கோவைசரளா, கலையரசன், மாறன், ரோபோ சங்கர், தம்பி ராமையா உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஷோபனா கிரியேஷன்ஸ் சார்பில் கே.கருணாநிதி தயாரிக்கிறார். எம்.நடராஜன், எஸ்.லால் தேவசகாயம் இணை தயாரிப்பு செய்துள்ளனர். அஸ்வமித்ரா இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படம் பற்றி ஆடம்ஸ் கூறியதாவது:

பெண்ணின் பார்வையில், பெண்களைப் பற்றிச் சொல்லப்படும் கதை இது. பெண்மை எவ்வளவு வலிமையானது என்பதை இதில் பதிவு செய்திருக்கிறோம். கே.பாலசந்தரின் தீவிரமான ரசிகன் நான். அவர் படங்களில் வரும் நாயகிகள் எப்படி வலிமையானவர்களாக இருப்பார்களோ, அதை போல இதன் நாயகி இருப்பார். நவீனகால காதல்தான் கதை என்றாலும் அதை கவிதையாகச் சொல்லியிருக்கிறோம்.

பிரணவி மனுகொண்டா கதாநாயகியாக நடித்திருக்கிறார். தெலுங்கு நடிகையான அவரை தமிழில் அறிமுகப் படுத்துகிறோம். கதைப்படி, அவர் ஒரு படம் இயக்கி முடித்திருக்கிற இயக்குநராக வருகிறார். அவர் துணிச்சலாக எதிர்கொள்கிற விஷயங்கள்தான் படம். ஊட்டியில் நடக்கும் கதை. இதில் நான் நடிக்கவில்லை. படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மே மாதம் வெளியிட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு ஆடம்ஸ் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

மேலும்