சென்னை: ‘சகுனி’ இயக்குநர் ஷங்கர் தயாள் இயக்கும் படத்துக்கு, ‘கே.எம்.கே -குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை மீனாட்சி அம்மன் மூவிஸ் சார்பில் அருண்குமார் சம்மந்தம், ஷங்கர் தயாள்.என் தயாரிக்கின்றனர். ஜெ.லக்ஷ்மண் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ‘சாதக பறவைகள்’ சங்கர் இசை அமைக்கிறார். செந்தில், யோகிபாபு, லிசி ஆண்டனி, சரவணன், ராகுல் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் நேற்று வெளியானது.
படம் பற்றி இயக்குநர் ஷங்கர் தயாள் கூறும்போது, “இது முழுவதும் குழந்தைகளை மையப்படுத்திய கதையை கொண்ட படம்.அவர்களைக் கொண்டு உருவாகியுள்ள அரசியல் படம். சமூகத்தை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் அவர்கள்பார்வையில் சமூகம் எப்படி இருக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறேன். குழந்தைகளுக்குப் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறோம். அரசியலையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் மூலமாக முக்கியமான கருத்து ஒன்றையும் படத்தில் சொல்கிறேன். இன்றைக்குத் தேவையான படமாக, யாரையும் காயப்படுத்தாத, ஜாலியான படமாக இது இருக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago