ஜூனில் ‘ரஜினி171’ படப்பிடிப்பு; அடுத்து ‘கைதி 2’ - லோகேஷ் கனகராஜ் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: “ஜூன் மாதத்தில் இருந்து ‘ரஜினி171’ படப்பிடிப்பு தொடங்கும். இப்படம் முடித்து அடுத்ததாக ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ளேன்” என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் இசையமைத்து, லோகேஷ் கனகராஜுடன் இணைந்து நடித்துள்ள ஆல்பம் பாடல் ‘இனிமேல்’. இப்பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இந்த ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ், “எனக்கு பொதுவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. என்னிடம் அவர்கள் கதை சொன்ன விதம், கமல்ஹாசனின் பாடல் இதெல்லாம் சேர்ந்து சரி நடிக்கலாம் என தோன்றியது. இதை நான் பெரிய நடிப்பாகவே கருதவில்லை.

ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து எது வந்தாலும் நான் மறுக்கமாட்டேன். அதுதான் முக்கியமான காரணம். அந்த ஆல்பம் பாடலுக்குப் பிறகு கேமராவுக்கு முன்னாள் நிற்கும் பயம் குறைந்துவிட்டது. அதற்கு காரணம் ஸ்ருதிஹாசன். படங்களை இயக்குவதே பிடித்திருக்கிறது.

நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை. 3 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியுள்ளேன். அதனை முதலில் எடுத்து முடிக்க வேண்டும்” என்றார். ‘ரஜினி 171’ படம் குறித்து பேசுகையில், “ஜூன் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும். இப்படம் முடித்து ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ளேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்