சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் இணக்கமான ரொமான்ஸில் இருவரும் நடித்துள்ளனர்.
ஸ்ருதிஹாசன் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் அறிவிப்பை அண்மையில் ராஜ்கமல் நிறுவனம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆல்பம் பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இப்பாடல் காதலர் தினத்தையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பாடல் எப்படி? - வழக்கமான காதல், அவர்களிடையே இணக்கமான ரொமான்ஸ், அதன்பின் வரும் சண்டை, பிரிவு, மீண்டும் இணைதல் என்ற ஃபார்முலாவில் இப்பாடல் உருவாகியுள்ளது. இந்தப் பாடல் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார் லோகஷ் கனகராஜ். ஆனால், அவருக்கும் ரொமான்ஸுக்கும் ஒரு காத தூரம் இடைவேளி இருப்பது போல தெரிகிறது.
காரணம், ஸ்ருதிஹாசனுடனான அவரது காட்சிகளில் மென்மையைத் தாண்டிய ஒரு ரக்கட் தனம் இருக்கத்தான் செய்கிறது. மேலும், உணர்ச்சிகளின் போதாமையும் முகத்தில் பளிச்சிடுகிறது. ஆங்கிலம் கலந்த பாடல் வரிகள் பெரிய அளவில் தாக்கமில்லாமல் கடக்கிறது. ஆல்பம் பாடல் வீடியோ:
» ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவு; பிரச்சாரத்துக்குப் பின் ‘தக் லைஃப்’ - கமல் கொடுத்த அப்டேட்
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago