கேரளா டூ கோடம்பாக்கம் - ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ மலையாள படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘ஹிருதயம்’. இந்தப் படத்தை வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். ரூ.80 கோடி வசூலை எட்டிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தக் கூட்டணியின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள மலையாள படம் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ (Varshangalkku Shesham). படத்தில் நிவின் பாலி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தியான் ஸ்ரீனிவாசன், பசில் ஜோசப், நீரஜ் மாதவ், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - கேரளாவிலிருந்து புறப்பட்டு கோடம்பாக்கம் நோக்கி சினிமா கனவுகளுடன் வரும் இளைஞர்கள் பிரணவ், தயன், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். பல்வேறு தடைகளுக்குப் பிறகு சினிமா அவ்வளவு எளிதானதல்ல என்பதை உணர்கிறார்கள்.

பீரியட் ட்ராமாவாக உருவாகியிருக்கும் இப்படத்தின் காட்சிகள் எமோஷனலாக கடக்கிறது. ஒவ்வொரு இடமாக வாய்ப்பு தேடி அலையும் அவர்களின் பயணமும், நிராகரிப்பும், அழுகையும் சினிமாவுக்காக போராடும் இளைஞர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்