சென்னை: நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா,மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசைஅமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒருவர் வில்லன் என்கிறார்கள்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக விஜய், வரியுடன் சேர்த்து ரூ.200 கோடி சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அவர் அடுத்து நடிக்கும் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் அவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சி தீவிரமாக களம் இறங்கப் போகிறது. இதற்கிடையே அவர் கடைசியாக நடிக்கும் படத்தை ‘ஆர்ஆர்ஆர்’ படத் தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கிறார் . இந்தப் படத்தை இயக்க ஹெச். வினோத், தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் உட்பட 3 இயக்குநர்கள் கதை சொன்னதாகவும் அதில் ஹெச். வினோத் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் கதை என்றும் சொல்கிறார்கள். இந்தப் படத்துக்காக விஜய்-க்கு வரியுடன் சேர்த்து ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago