சென்னை: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா இணையும் புதிய படமான ‘புறநானூறு’ படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை தயாரிக்கும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. சூர்யா மற்றும் சுதா கொங்கரா என இருவரும் இணைந்து இதனை அறிவித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தேசிய விருதுகளையும் வென்றிருந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணியாற்ற உள்ளதாக கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. ‘புறநானூறு’ என இந்த படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டது. இதில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘புறநானூறு படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இந்தப் படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவது சிறப்பு வாய்ந்தது. இது எங்கள் நெஞ்சத்துக்கு நெருக்கமானது. சிறந்த படைப்பை உங்களுக்கு வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். விரைவில் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
» மறக்குமா நெஞ்சம் | ‘தல என்னை அணைத்த தருணம் என்றென்றும் நினைவிருக்கும்’ - ஜடேஜா நெகிழ்ச்சி
» கோவையில் பிரதமர் மோடி பிரம்மாண்ட வாகனப் பேரணி - முழு விவரம்
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago